ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 38 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 10 பேர் மீது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் சென்ற 452 பேர் மீது காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 22 பேர் மீது மற்றும் இதர பிரிவுகளின் கீழ் 71 பேர் என மொத்தம் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 79,000 ரூபாய் வசூலிப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலைவிதிகளை மீறியவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.