Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!!

பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் கூட கல்வியில் மாணவர்கள் நலன் பாதித்து விடக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கல்வி துறைகள் கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியாக உள்ளது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் www.tndte.gov.in என்ற இணையத்தின் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |