Categories
சினிமா தமிழ் சினிமா

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற ரசிகர்களுடன் இன்று சந்திப்பு…. வாரிசு ரிலீஸ் சிக்கல் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை?…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தும். நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு வாரிசு திரைப்படத்தின் தெலுங்கில் ரிலீஸில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் உடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டம் சென்னை பனையூரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று  நடை பெறுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் மன்ற இயக்குனர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் மன்ற ரசிகர்களுக்கு இன்று தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டத்தில் அவரும் பங்கேற்க இருக்கிறாராம். மேலும் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதால் பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |