Categories
இந்திய சினிமா சினிமா

வெளியான சில மணி நேரத்தில்… “அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர்”… புதிய சாதனை… ஏன் தெரியுமா?

ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள சடக் 2 படத்தின் டிரைலர் அதிக டிஸ்லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது

பாலிவுட்டில் சுமார் 20 வருடங்களுக்கு மகேஷ் பட் இயக்கிய  சடக்  படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பட்டின் மகள்களான பூஜா பட் மற்றும் அலியா பட் இருவரும் நடித்துள்ளனர். முகேஷ் பட் தயாரித்து மகேஷ் பட் இயக்கிய இந்த படத்தில் ஆலியா பட்க்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார். இந்த படம்  பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆனால் வெளியான சில மணி நேரத்திலேயே அதிக டிஸ்லைக்குகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. டிரைலர் வெளியாகி 12 மணி நேரத்திற்குள் 15 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்று சாதித்துள்ளது. எதிர்பாராத இத்தனை டிஸ்லைக்குகளால் படக்குழுவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது பாலிவுட்டில் பல சிக்கல்களை உருவாக்கியது. அதில் முக்கியமான ஒன்று வாரிசு அரசியல்.

சுஷாந்தின் தற்கொலையை தொடர்ந்து வாரிசு அரசியல் என நடிகர் நடிகைகளை குறிவைத்து சமூகத்தில் எதிர்மறையான கருத்துக்கள் எழத் தொடங்கின. அந்த வகையில்தான் மகேஷ் பட்டின் மகளான அலியாபட் நடித்திருக்கும் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளது. அதோடு இப்படத்தை வெளியிடும் ஹாட்ஸ்டாரையும் மொபைலில் இருந்து அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளது. இதனால் #UninstallHotstar  என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |