சென்னையில் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கததாக கூறி ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளுதே தவிர பாதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் மக்கள் இதனை உணராமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் இருக்கிறார்கள்.
எனவே சென்னை மாநகராட்சி, மக்களின் அலட்சியப் போக்கை குறைக்கும் விதமாக அதிரடி ரெய்டு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் இன்று ஒரே நாளில் ரூபாய் 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிப்பதோடு கடும் நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மக்கள் அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.