Categories
மாநில செய்திகள்

ALERT: “5 நாட்களுக்கு மிதமான மழை”….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னையில் தொடர்ந்து மாலைப் பொழுதில் ஆரம்பிக்கும் மழையானது விடிய விடிய பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் பல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Categories

Tech |