தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்றவர்களுக்கு 25000 ரூபாயும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்று வாட்ஸப்பில் தகவல் பரவி வருகிறது.
எனவே இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் ஸ்காலர்ஷிப் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் https://www.education.gov.in/en/schemes-school என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்