Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 8ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |