தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், கல்பாக்கம், மரக்காணம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் சிறுவர் சிறுமிகள் அதிக அளவில் அம்மை கொப்பளம் நோயால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நடுத்தர வயதினரையும் இந்த நோய் தாக்கி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது அம்மை நோயின் பரவ ஆரம்பித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.