Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த ஆபத்து…. மக்களே அலெர்ட்டா இருங்க…. அரசு அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நிம்மதி அடைந்த மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,கேரளா மற்றும் டெல்லி உட்பட 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.அதனால் அதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மொத்தம் 1,16,991 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும்,இந்தக் குழுக்கள் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து டெங்கு கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டாலே இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |