வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே சென்னை மக்கள் அலெர்ட்டாக இருக்கவும். தென்மேற்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.