தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது.
இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். ஆகவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு போக வேண்டாம்.
மழையை பொறுத்தவரையிலும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசானமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் ஏராளமான இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.