தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தற்போது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.