Categories
மாநில செய்திகள்

ALERT: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழை ஓயாது…. வானிலை ஆய்வு மையம் புதிய அலெர்ட்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி கடந்த ஒரு சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் ஒன்பதாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரி நோக்கி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும் என்றும் காற்றழுத்தின் வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |