Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… தீவிர ரோந்து பணி… வலை வீசி தேடும் காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது முந்திரி தோப்பில் பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கூரணி கிராமத்திலிருக்கும் முந்திரி தோப்பில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தோப்பில் இரண்டு பேரல்கள் மற்றும் குடங்களில் 500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் அந்த சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்துள்ளனர். மேலும் இந்த சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |