Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை காவல்துறையினர் புது பேருந்து நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ராஜகுரு, சதீஷ் என்ற 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |