சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் காவல்துறையினருக்கு பொள்ளாச்சி அருகே சிலர் சட்டவிரோதமாக வந்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் திப்பம்பட்டி பூங்கா நகரில் சிவகுமார் என்பவர் மது விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்தா 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.