மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் காவல்துறையினருக்கு கேட்டுகடை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வா என்பவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து செல்வாவை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.