அளவுக்கு அதிக எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்ததால் லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மண்டல துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோணி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மண்டல துணை தாசில்தார் மடக்கி பிடித்து சோதனை செய்தார். அந்த சோதனையில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் அளவுக்கு அதிகமான எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்தது மண்டல துணை தாசில்தாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து மண்டல துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோணி பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அனுமதியின்றி அதிக எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் கேரள மாநிலம் மனக்கம்படி பகுதியில் வசிக்கும் ஷானாவாஸ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஷானாவாசை கைதுசெய்துள்ளனர்.