மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Candida Macrine என்ற பெண் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கால் தரையில் இறந்துகிடந்தார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் Candida-குடும்பத்தினர் இந்த பிரச்னையை சட்டப்படி அணுகுவோம் என்று கூறினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் பதறிப்போய் Candida உயிரிழந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் எங்களால் சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ஆனால் இந்த அறிக்கையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அறிக்கையில் மன்னிப்பு கேட்ட மாதிரி எனக்கு ஏதும் தெரியவில்லை என்றும் என்று Candida-வின் மகன் Immanuel கூறியுள்ளார். இந்த சம்பவங்களுக்கு இடையில் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் Candida-வின் குடும்பத்தினருடன் பேச தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் எங்கள் தாய்க்கு என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ள நாங்கள் முயற்சி செய்தும் அவர்கள் அனைத்தையும் மறைத்து விட்டார்கள். இனியும் நான் அவர்களை நம்ப மாட்டேன் என்று Immanuel கூறியுள்ளார். மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசுவதைவிட நீதிமன்றம் அதிகாரிகளிடம் பேசுவதை தான் நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.