Categories
மாநில செய்திகள்

அய்யோ… மாணவர்கள் பாவம்..! தண்ணீர் இல்ல… ஜன்னல்ல ஓட்டை… பதற வைக்கும் தமிழக விடுதிகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, மாணவர் விடுதியில் பார்த்தீர்கள் என்றால்…  ஒரு விடுதிக்கும் இன்னொரு விடுதிக்கும் பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடு கலையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலவிடுதியில் மாணவர்கள் தங்கும் அளவிற்கு அங்கு இருக்கின்ற சமையல் கூடங்கள்,  உணவு உண்ணும் இடமெல்லாம் இன்னும் சொல்லப்போனால்…

மிருகங்களே அங்கே உள்ள போகாத அளவிற்கு ஒரு துர்நாற்றம், புகை மூட்டம், சுகாதாரமாக இல்லை. நாங்கள் சொல்லி இருக்கிறோம்.. நடவடிக்கை எடுக்கப் போகிறோம். தண்ணி இல்ல. குறிப்பாக மாணவர்களுக்கு தண்ணீர் வேண்டும். தண்ணீர் சுகாதாரமாக இல்லை. மாணவர்கள் ஆரோக்கியமாக விடுதியில் தங்கி படித்து,  தேர்வு எழுதுவதற்கும் அடுத்த தலைமுறையை உருவாவதற்கான வாய்ப்பு வராது, இது மாதிரி இருந்தால்..

குறைந்தபட்சம் மாணவர்கள் விடுதி பாதுகாக்கப்பட வேண்டும், சுகாதாரமாக இருக்க வேண்டும்,  அதுதான் எங்களுடைய பார்வை. இன்றைக்கு பார்த்ததில் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது, ஏற்றத்தாழ்வுகளும், வித்தியாசமும் எங்கேயும் இருக்கக் கூடாது. இன்னொரு விடுதி அதுவும் நல்லா இல்ல. எப்படி என்றால் ? ஒரு விடுதி நல்லா இல்ல, அதைவிட மோசமாக இன்னொரு விடுதி இருக்கிறது. அப்படி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.

குறை இருப்பதை குறையாக சொல்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நடவடிக்கை எடுங்க என்று சொல்லி இருக்கிறோம். பெண்களுடைய விடுதியில் ஜன்னலில் ஓட்டை இருக்கிறது, இதெல்லாம் கண்காணிக்க வேண்டும் விடுதிக்காப்பாளர். எப்படி ஓட்டை போட்டிருப்பார்கள் ? அது எல்லாம் அடைக்க வேண்டும், குழந்தைகள்,  பெண்கள் எல்லாம் தங்கி இருக்கிறார்கள். அது உடனே சரி செய்ய வேண்டும். அதுதான் சொல்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |