சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவிந்தரை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் ரவி-மகா திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், வேலை என ரவி-மகா ஜோடி படு பிஸியாக இருக்கிறார்கள். அதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரவி-மகா ஜோடி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ரவீந்தர் தற்போது தன்னுடைய மனைவியுடன் ஒரு ஹோட்டலில் அமர்ந்து உணவு சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் அந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு சற்று பெரிதாக காணப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ரவி-மகா ஜோடி வெளியிடவில்லை. மேலும் மகாலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்ததில் ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram