வேலூருக்கு சென்ற நீர்ப்பாசனத்துறை அமைச்சரை அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ துரைமுருகன் அவர்கள் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து வேலூருக்கு சென்ற அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், டி. ஐ. ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கதிர்ஆனந்த், எம். பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், பாலாஜி வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கலெக்டர்கள் சேக்மன்சூர், கணேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றுள்ளனர்.
அதன்பின் அமைச்சர் பேட்டியளித்தபோது, வேலூரில் கொரோனா தொற்று பற்றி அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும், இதுவரை இரண்டு முறை ஆக்சிஜன் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது நிரந்தரமாகவே இருப்பதனால் மத்திய அரசிடம் ஆக்சிஜன் கேட்டு இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆகவே இரண்டு நாட்களில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் கூறியுள்ளார்.