Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனி இப்படி நடக்க கூடாது…. ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி…. என்ஜினீயர்களின் தகவல்….!!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்தபோது மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கு பிரதம மந்திரியின் கேர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனம் பெங்களூரிலிருந்து ஆக்சிஜன் ஆலைக்கு தேவையுள்ள எந்திரங்களை மன்னார்குடிக்கு அனுப்பிவைத்தது. இந்த எந்திரங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்து ஆலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து என்ஜினீயர்கள் கூறும்போது, இந்த ஆலை நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வசதி கொண்டது என்று தெரிவித்தனர். மேலும் 200 படுக்கை வசதிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |