கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அக்ஷய்குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். மேலும் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் கூடிய விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.