Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அக்க்ஷய பாத்திரம்” பணம்…. பொருள்…. நகை….. எல்லாம் UNLIMITED….. ரூ2,10,00,000 மேசடி…. 8 பேர் கைது….!!

திருப்பத்தூர் அருகே அக்ஷய பாத்திரம் இருப்பதாக கூறி ரூபாய் 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் இவரிடம் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்களிடம் பணம், பொன், பொருள் உள்ளிட்டவற்றை அளவில்லாமல் கொடுக்கக்கூடிய அட்சய பாத்திரம் இருப்பதாகவும் அதன் விலை ரூபாய் 2 கோடியே 10 லட்சம் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய நவீன்குமார், பணத்தை கொடுத்து அதனை பெற்றுள்ளார்.

அதன் பின்பு தான் தெரிந்தது அது போலியான அட்டைப்பெட்டியில் செய்யப்பட்ட டம்மி பாக்ஸ் என்று. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்தவகையில் நேற்றைய தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் வழி மறித்த போது அதில்,

இருந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். பின் அவர்களை மடக்கிப் பிடித்து அதிகாரிகள் விசாரிக்கையில், இவர்கள்தான் அட்சயபாத்திரம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம்  ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வேலூரைச் சேர்ந்த நபர் ஒருவரை 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். குற்ற செயலில் ஈடுபட்ட மற்றவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |