அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் முதல் திரைப்படம் குறித்து அப்டேட்ஸ்.
நடிகை அக்ஷரா ஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு கடாரம் கொண்டானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷரா ஹாசன்.
தற்போது இயக்குனர் எஸ் ராமமூர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீஸ் செய்யபடும் திரைப்படம் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. ட்ரென்ட் லவுட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சுஷா இசையமைத்து ஸ்ரேயா தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் 2020ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்த நிலையில் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் வரும் மார்ச் 25ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது