Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்…. சான்றிதழ் வழங்க தடை…. கலெக்டரின் நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து  கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் வசதி வழங்க வேண்டும் என்று அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என மின் வாரிய செயற்பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அரசு புறம்போக்கு இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் வீடு, கடைகள் அனைத்தும் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |