உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 2022இல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மின்சார தொழிலாளர்கள் வருங்கால வைப்புத்தொகை ஊழல் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் லக்னோவில் கூறியதாவது:உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவினர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டாடிவருகின்றனர். தன்னிடம் இருந்த பணத்தை மாற்ற (ரூ.500, ரூ.100) அவரின் தாயார் நீண்ட வரிசையில் வங்கிமுன்பு காத்திருந்தபோது பிறந்த குறைமாத குழந்தை அது. சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை மக்களை ஆழமாகப் பாதித்துள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்புத் தொகை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு பணம் திருப்பி கிடைக்க வேண்டும். உத்தரப் பிரதேச 2022ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று சமாஜ்வாதி மீண்டும் ஆட்சிக்கு வரும் இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.