ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீப நாட்களில் தோனி விளையாடுவதை காணாததால் நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே காணப்படுகிறார். மேலும் தோனி தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாட உள்ளதால் இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் என தெரிகிறது. அவர் விளையாடுவதை பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன். அவர் விளையாடும் போட்டியை காண டிக்கெட் கட்டணத்தை விட பன்மடங்கு செலுத்தி கூட பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.