நடிகர் அஜித்துடன் நடிகை ஷாலினி எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் . இதையடுத்து இவர் காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன்பின்னர் அஜித் , விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்தார் . அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் ஷாலினி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை .
இந்நிலையில் நடிகை ஷாலினி அஜித்துடன் எடுத்த க்யூட்டான செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .