Categories
சினிமா தமிழ் சினிமா

பிகிலை அடுத்து அஜித் படமா? – அர்ச்சனா கல்பாத்தி பதில் …!!

பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பிகில். நயன்தாரா,  விவேக் , யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளங்களில் படம் தொடர்பான தகவல்களை அனைத்தையும் பகிர்ந்து வந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அந்த வகையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படம் தொடர்பான தகவல்களை விஜய் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் , ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

அதில் பிகில் படத்திற்கான டிக்கெட் இன்று மாலையிலிருந்து புக் செய்யப்படும் என்றும் , படத்திற்கான புரோமோ காட்சிகள் இன்று மாலையே வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் படத்துக்கான தீம் இசையை வெளியிடுவீர்களாஎன்று கேட்டதற்கு அப்படி எந்த தீம் இசையும் வெளியிடப்பட மாட்டாது என்றும் , படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் தீம் இசை நிச்சயமாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Image result for Archana Kalpathi vijay

மேலும் தியேட்டர்களில் காலை ஒரு மணி காட்சிகள் இருக்குமா ? என்று கேட்டதற்கு அதை தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்வார்கள் என்றும் , 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்காக ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு பிகில் படம் வெறித்தனமாக இருக்கும் என்றும், தீபாவளி மற்றும் சில காரணங்களால் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே டப் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

Image result for Archana Kalpathi vijay

இது மட்டுமல்லாமல் டிரைலரில் இடம் பெற்றுள்ள விஎஃப்எஸ் காட்சிகள்அவ்வளவு சிறப்பாக இல்லையே என்று கேட்டதற்கு ட்ரெய்லரை விட தியேட்டரில் விஎஃப்எஸ் காட்சிகள் பிரமாதமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தமிழ்ராக்கர்ஸில் படம் வெளியாவது எப்படித் தடுக்கப் போகிறார்கள் என்று கேட்டதற்கு அதற்கான பிரத்யேக முயற்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். பிகில் பட ஷூட்டிங்கில் உண்மையில் விஜய் எத்தனை நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கேட்டதற்கு 150 நாட்கள் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.

Image result for Archana Kalpathi vijay

இதுமட்டுமல்லாமல் படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று கேட்டதற்கு இது கால்பந்தை மையப்படுத்திய படம் என்பதால் அந்த நிளம் தேவைப்பட்டது என்றும் , இந்த படத்தின் மூலம் கால்பந்தாட்டம் தனி கவனம் பெறும் என்றும் கூறினார். மேலும் பாடலாசிரியர் விவேக் பற்றி கேட்டதற்கு சிங்க பெண்ணே..!!  மற்றும் மாதரே பாடல் மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் என்றும் கூறினார்.

Image result for Archana Kalpathi actor ajith

அடுத்ததாக அஜித்துடன் இணையும் வாய்ப்பு உள்ளதா ? என்று கேட்டதற்கு அதற்கான சரியான கதை நேரம் வரும்போது நிச்சயம் நடக்கும் என்றும் கூறினார். மேலும் படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வெளியிடுவார்கள் என்று கேட்டதற்கு அதற்கான யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக படம் பார்க்கும் ரசிகர்கள் படம் பார்க்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுமாறு அர்ச்சனா கல்பாத்தி கேட்டுக் கொண்டுள்ளார்

Categories

Tech |