Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் பயன்படுத்திய பைக்கை விற்றுவிட்டேன்…. நடிகர் சம்பத் ராவ் கொடுத்த பரபரப்பு பேட்டி….!!

வீட்டு வாடகை கொடுக்க முடியாத நேரத்தில் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக்கை விற்றதாக நடிகர் சம்பத் ராவ் சமீபத்தில் நடத்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவருக்கு “தல” என்ற பட்டப்பெயரும் உண்டு. இந்த பெயர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படத்தின் மூலம் நடிகர் அஜித்திற்கு  கிடைத்ததாகும். இந்தப் படமானது அஜித்தின் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித்துடன் நடித்த சக நடிகர்களுக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. அவ்வாறு தீனா படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் சம்பத் ராவ்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “தீனா படத்தின் மூலம் நான் திரையுலகில் அறிமுகமானேன். அதற்காக அஜித்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தீனா படத்தில் அஜித் உபயோகித்த புல்லட் பைக் என்னுடையதுதான். ஒரு காலத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நேரத்தில் அந்த பைக்கை நான் விற்றுவிட்டேன். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |