Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் அஜித் பட நடிகை…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை கனிகா பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. இவர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்திலும், அஜித் நடித்த வரலாறு படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்போது இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில் இவர் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கனிகா

Categories

Tech |