Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் செல்போனை பிடிங்கிய அஜித்…. பிக்பாஸ் பிரபலம் விளக்கம்…!!!

தேர்தலன்று ரசிகரின் செல்போனை பிடுங்கி அஜித் குறித்து பிக்பாஸ் பிரபல ஆரி பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். அந்த வரிசையில் முன்னணி நடிகர் அஜித் தனது மனைவியுடன் அதிகாலையில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து நின்றுள்ளனர். அதில் ஒருவர் மாஸ்க் அணியாமல் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த அஜித் ரசிகனின் செல்போனை பிடுங்கி விட்டார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இனி இப்படி செய்யாதீர்கள். மாஸ்க் போடுங்கள் என்று கூறி போனை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

 

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலம் ஆரியிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் அஜீத் மன்னிப்பு கேட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டார். பெரும்பாலும் பிரபலங்கள் வெளியில் வரும் போது இது போன்ற ரசிகர்கள் அன்பு இருக்கத்தான் கூடும். அஜித் போனை திருப்பி கொடுத்த பண்பை நீங்கள் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |