Categories
சினிமா தமிழ் சினிமா

திரையில் அஜித்தின் முதல் காட்சி….. இதுவரை பார்க்காத அரிய புகைப்படம்….!!

திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமார் தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தல எனும் பெயரில் அதிக இடத்தை பிடித்தவர். அஜித் குமார் எச். வினோத் இயக்கிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை காரணமாக அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பல வெற்றிப்படங்களை கொடுத்த தல அஜித் முதல் படம் அமராவதி என்பதே பலரும் அறிந்த ஒன்று. ஆனால் திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியை பலரும் அறிந்ததில்லை. இந்நிலையில் அஜித் திரையில் நடித்த முதல் காட்சியின் அறிய புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

Categories

Tech |