மாஸ்டர் படத்தின் வெளியான காட்சிகளை யரும் பகிர வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் படத்தின் வெளியான காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்று டுவிட்டர் பக்கத்தில் கேட்டு கொண்டார்.
இதை அடுத்து அஜித் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். மாஸ்டர் படத்தின் காட்சிகள் யார் கண்ணிலும் தென்பட்டால் யாரும் பகிர வேண்டாம். திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு மாஸ்டர் படக்குழுவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.