வலிமை படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முழுமையாக முடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் படம் வலிமை.போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளது. படக்குழு அதனை ஸ்பெயினில் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அனுமதி கிடைக்கும்வரை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி அஜித் தனது டப்பிங் அனைத்தையும் முழுமையாக முடித்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.