அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, சமீப காலமாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் ,தற்போது இவர் ஒரு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மாஸ் லுக்கில் அஜித் இருக்கும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.