எஸ்பிபி மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் செய்தி கூட வெளியிடாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது பாடல்கள் நம் அன்றாட வாழ்வில், தினமும் பயணிக்க கூடியவை. எனவே அவரை நான் மறக்கவே முடியாது. எஸ்பிபி மறைவிற்கு நடிகர்கள் பலரும் நேரில் சென்றுஅவரது மகன் சரணிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஆனால்,
பாடகர் எஸ்பிபி-யின் மறைவிற்கு நடிகர் அஜித் நேரில் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. எஸ்பிபி மூலமாகத்தான் அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரது மறைவிற்கு அஜித் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயுடன் ஒப்பிட்டு மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பலர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு அஜித் தரப்பிலிருந்து மிக விரைவில் சரியான பதில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.