தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் தற்போது தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மலையாள சினிமாவில் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் ரீமேக் தான் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு கனவுகளை சுமந்து வரும் ஒரு பெண்மணி தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற முடியாமல் அடுப்பங்கரைக்குள் அடைக்கப்படுகிறாள். அதன் பிறகு பிரச்சினைகளைத் தாண்டி எப்படி தன்னுடைய லட்சியத்தை அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை. மேலும் இந்த டிரைலர் வீடியோவானது தற்போது இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.