கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனங்கள் சில சலுகைகளை மக்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இன்கம்மிங் அவுட்கோயிங் வசதி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் கூடுதலாக 10 ரூபாய்தான் டாக் டைம் வழங்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற ஒரு சலுகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.