ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 78 மற்றும் ரூபாய் 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூபாய் 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறைவுபெறும் வரை வழங்கப்படுகிறது. ரூ.248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.