Categories
தேசிய செய்திகள்

“விமான நிலைய ஓடு பாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்”…. மின்கம்பத்தில் மோதி விபத்து…!!

விஜயவாடா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

சனிக்கிழமை ஓமனில் இருந்து 60 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் ஓடு பாதையை ஒட்டி இருந்த மின்சார கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

Categories

Tech |