Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானங்கள்… மீண்டும் இயக்கம்…!!!

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஜூன் 3ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமலில் ஊரடங்கை மேலும் மீண்டும் நீட்டித்து பல மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூன் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதை இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |