Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… சீனாவுடனான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு..!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் மாதம் 30-ஆம் தேதி  வரை நீடிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அந்நாட்டிற்கான விமானப்போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த 14-ஆம் தேதி வரை ரத்து செய்திருந்தது.

ஆனால்  15ஆம் தேதி கடந்த பிறகும் இன்னும் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவில்லை. அதேபோல டெல்லி-ஹாங்காங் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் 2 வழித்தடங்களிலும் அமுலில் இருந்து வரும் விமான போக்குவரத்து தடையை மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |