Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் ஊழியருக்கு…. கொரோனா தடுப்பூசியால் அலர்ஜி…!!

எய்ம்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துமனையில் கட்டாயமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் எய்ம்ஸ் மருத்துவமனை காவலர் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அங்கு இதுவரை 95 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |