Categories
தேசிய செய்திகள்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக மனு!

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அதிமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்திய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மனு மீது 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |