Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விருப்பமொழியாக “தமிழ்”… பேரவையில் அதிமுக MP வலியுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதற்கு முன் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிச்சாமி மும்மொழி கொள்கையை எதிர்த்தும், தமிழை வளர்க்கவும் மத்திய அரசிடம் தொடர்ந்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற அவையில் வலியுறுத்தி பேசுவார்கள் என்றும் தெரிவித்தார். அதன்படி, இன்று நாடாளுமன்ற பேரவை கூட்டத்தொடரில் பேசிய அதிமுக உறுப்பினர் கருப்பண்ணன், தமிழகத்தில் இந்தியை விருப்பம் மொழியாக படித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும் பட்சத்தில், இந்தியா முழுவதும் தமிழ் மொழியையும் அதேபோல் விருப்பம் மொழியாக அறிவித்து அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |