Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…! தீர்ப்பில் சில திருத்தம் இருக்காம்… டக்குனு சொன்ன நீதிபதி …!!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பிலும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய வைரமுத்து தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதியில் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து,  தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

அந்த வழக்கில் இன்றைய காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டு  இருந்தது. ஆனால் காலை 10:30 மணிக்கு வழக்கமாக நீதிபதி ஜெயச்சந்திரன் வர தாமதமாகிய  நிலையில் சற்று நேரத்துக்கு முன்பாக அவர் வந்த போது இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட இருக்கும்  தீர்ப்பில் சில திருத்தங்கள் இருப்பதால் அது முடிந்த பிறகு 11:30 மணியளவில் தீர்ப்பு வாசிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதன் மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லுமா ? செல்லாதா என்பது தொடர்பான வழக்கில் உத்தரவை இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நீதிமன்றம் வழங்க இருக்கின்றது.

Categories

Tech |